கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை!!

கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது.

இந்த வைரஸ் இதற்கு முன்னர் நோயை ஏற்படுத்திய வைரசாக அடையாளம் காணப்படவில்லை அத்தோடு 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இதனை கொரோனா வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறியாக காய்ச்சல், இருமல், தொண்டையில் வலி ஏற்படுதல், சுவாசிப்பதில் சிரமம், சுவாசிக்கும் வேகம் அதிகரித்தல் ஆகியன ஏற்படக்கூடும். தொண்டையில் ஏற்படும் பாதிப்பினால் நிமோனியா போன்ற நிலைமையும் ஏற்படக்கூடும் என்று தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோயை தடுப்பதற்கு கீழ் கண்ட வழிமுறைகளை கையாள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

• பற்களை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். இதற்காக அடிக்கடி சவர்க்காரத்தை பயன்டுத்தி கைகளை கழுவ வேண்டும். இதற்கு கிருமிகளை அழிக்கக்கூடிய Alcohol Rub என்பதை பயன்படுத்தி சுத்தம் செய்ய முடியும்.
• தும்மல், இருமல் ஏற்படும் போது முக கவசம் மற்றும் ரிசு போன்றவற்றை பயன்படுத்த முடியும். பயன்படுத்திய ரிசுவை பாதுகாப்பான முறையில் கழிவு தொட்டியில் போட வேண்டும்.
• தேவையற்ற வகையில் அடிக்கடி முகம், கண், மற்றும் காதுகளைத் தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
• தற்போதைய நிலமைக்கு அமைவாக ஆரோக்கியமான மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது முக கவசத்தை அணிவது அவசியமில்லை.

இந்த வைரஸ் அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏதேனும் பாடசாலைக்கு மேலதிக ஆலோசகைள் அல்லது தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது கல்வி அமைச்சு, சுகாதார மற்றும் போஷாக்கு கிளையுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிய முடியும்.

இதற்கான தொலைபேசி இலக்கம் 011 278 48 72 அல்லது 011 278 41 63 என்பதாகும்.

Related Posts