கொரோனா வைரசின் மோசமான விடயங்கள் இனிமேல்தான் நிகழப்போகின்றன- உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம் என குறிப்பிட்டுள்ளார்

இது ஆபத்தான கூட்டு,நூறுவருடங்களிற்கு பின்னர் இது மீண்டும் இடமபெறுகின்றது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரசினை 1918 இல் மில்லியன் கணக்கானவர்களை பலிகொண்ட ஸ்பானிஸ் காய்ச்சலுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது எங்களிடம் தொழில்நுட்பம் உள்ளது ,எங்களால் இந்த பேரழிவை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரசிற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதற்கும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உலகளாவிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமையையும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சமூகம் வைரசினை மனித குலத்திற்கு எதிரான பொது எதிரி என கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts