கொரோனா: மேலும் இரு இலங்கையர்களுக்குத் தொற்று?

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் இருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரும், சோமாவதி புனித தளத்துக்கு யாத்திரை சென்ற ஒருவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த இருவரையும் அங்கொட வைத்தியசாலைக்கு (IDH) மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.

Related Posts