கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிப்பொன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொரோனா தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.