கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில நாடுகள் ஏற்கனவே முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி கூறியுள்ளார்.

மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டால், முடக்க கட்டுப்பாடுகள் அலும்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் உயர் மட்ட அதிகாரி கூறியுள்ளார்.

அத்தோடு மற்றொரு முடக்கம் அமுலுக்கு வந்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் திட்டமிட்டமைக்கு அதிகமாக இந்த ஆண்டுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி குறிப்பிட்டார்.

Related Posts