கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts