கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமையுடன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 7 மணி வரை 1,850 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 303,682 ஆக காணப்படுகின்றது. இதில் 273 496 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி 25,928 தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts