கொரோனா தொற்றால் இணுவிலில் குருக்கள் மரணம்!!

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Related Posts