கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் இளையதம்பி உதயகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் முதல் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

ஆகவே அனைத்து பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பிணி தாய்மார்களும் வைத்திய ஆலோசனைக்கமைய தடுப்பூசியை எந்தவொரு தயக்கமும் இன்றி தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளமுடியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts