கொரோனா குறித்து தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொவிட் -19 தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியா உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் தொடர்ந்தும் மக்கள் தமது சுய பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமூக பரவல் குறித்த அச்சம் குறைந்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை ஆரோக்கியமனதாக உள்ளது. கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் குறைவானதாக உள்ளது. எனினும் தொடர்ச்சியாக நாம் சில சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.

நோயாளர்கள் எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை என்பன அரசாங்கம் அறிவிக்கும் விடயம் அல்ல. இது கொவிட் – 19 கட்டுபடுத்தும் மருத்துவ அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளின் மூலமாகவே இந்த தகவல்கள் வெளியிடப்படும்.

இது குறித்த முக்கிய பொறுப்பு எம்மிடமே உள்ளது. நாம் இப்போதும் வரையில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகலையே முன்னெடுத்து வருகின்றோம். இதில் பிரதானமாக இந்த நோய் எவ்வாறு யாருக்கு எந்த நேரத்தில் தோற்றுகின்றது என்பதையே கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

நோயாளர்கள் குறித்து உண்மையை மறைத்தால் அது மீண்டும் எம்மையே பாதிக்கும். இந்த நோய் தாக்கத்தில் மக்களே பிரதானமானவர்கள் அவ்வறு இருக்கையில் நோய் குறித்த உண்மைகளை விரும்பியோ, விரும்பாமலோ தெரிவித்தாக வேண்டியுள்ளது

சர்வதேச நாடுகளில் இன்னமும் கொவிட் -19 தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வெளிநாட்டவர் எவரும் இலங்கைக்கு வருகின்ற நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுநோய் இருப்பின் அது மீண்டும் இலங்கையில் பரவக்கூடிய சூழல் உருவாகும்.

எனவே எம்மை சுற்றி எப்போதுமே அச்றுத்தல் இருந்துகொண்டே உள்ளது. அதேபோல் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் நாய், பூனை மூலமாக பரவுகின்றதாக ஒரு கருத்து இப்போது சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் நாய், பூனை போன்ற மிருகங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றதால் சாதாரணமாக மக்கள் மத்தியில் அச்சமொன்றும் உருவாகியுள்ளது. எவ்வாறு இருப்பினும் நாய், பூனை மூலமாக கொவிட் -19 வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக கண்டறியப்படவில்லை. அவ்வாறு பரவும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோய் குறித்த உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் அது குறித்த உண்மைத் தன்மையை வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

Related Posts