கொரோனா எதிரொலி – விமான சேவைகள் இரத்து!!

நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சிவில் விமானம் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு மறு அறிவித்தல் வரும் வரை குறித்த தடை அமுலில் இருக்குமென சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்தசிறி தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் வேகம் குறைவடைந்துள்ளதால், சீனர்கள் இலங்கைக்கு வருவதை தடைசெய்ய வேண்டிய அவசியமில்லையென தெரிவித்துள்ளார்.

எனினும் சீனாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கப்டுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts