கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது.

83 ஆண்களும் 78 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 732 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 39 ஆயிரத்து 140 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts