கொரியன் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு செயல்திட்டம் தொடர்பான கருத்தரங்கு நாளை புதன்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதி, பலநோக்கக் கூட்டுறவுச்சங்க தலைமைக் கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை வேலை வாயப்பு திட்டமுறை மையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் கொரியா நாட்டிற்கு வேலைவாய்ப்பை பெற்றுச்செல்ல விரும்புவர்களை கலந்துகொள்ளும்படி இலங்கையில் உள்ள வேலைவாயப்பு திட்டமுறை மனிதவள அபிவிருத்தி பிரிவு வேண்டியுள்ளது.