கொன்று குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள்:கீவ் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீவ் ராணுவம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடர் நகரில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, ரஷ்ய வீரர்கள் பலர் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த குழுவின் மீது உக்ரேனிய துருப்புகள் ரஷ்ய காலத்து ஏவுகணையான Tochka-Uஐ செலுத்தியுள்ளனர்.

இதில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கீவ் ராணுவம் வெளியிட்ட தகவலில், ‘சிறப்பு படைகள், துப்பாக்கி தாக்குதல் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர்’ என தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான சண்டை நடந்துள்ள இடமான சோலேடர் ஒரு காலத்தில் உப்புச் சுரங்க நகரமாக இருந்துள்ளது.

மேலும், அருகில் உள்ள நகரமான Bakhmutஐ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்ய படைகள் முயற்சிக்கும் போது, இடைவிடாத ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் இந்த நிலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts