கொட்டும் மழையிலும் யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவு நாள் இன்று யாழ். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்பாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் குறித்த நினைவு நாள் வாரத்தை அனுஸ்டிப்பதற்காக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன் ,சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நாளில் யாழ்ப்பாணத்தில் விடாது பெய்து வரும் மழையால் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மட்டுமல்ல ஊடகவியலாளர்களும் கொட்டும் மழையில் நனைந்தவாறு தங்களுடைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவு நாளை நினைவுகூர்ந்தனர்.

Related Posts