விஸ்வமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகள் குழுவினால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், இராணுவ அதிகாரிகள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் இராணுவ அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிரைக் காப்பாற்றினர்.
பின்னர், தாக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 8-ம் திகதி இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது தேராவில் விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் மற்றுமொரு இளைஞன் திருட்டு குற்றம் சுமத்தி தாக்கியுள்ளார்.
தாக்குதலால் காயமடைந்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞரைப் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நிலையில் இராணுவ அதிகாரிகள் தலையிட்டு அவரை காப்பாற்றிள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.