‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வார்த்தையை சொன்னபோது மொழிபெயர்ப்பாளர் அதனை சொல்வதா விடுவதா என ஆச்சரியத்துடன் பார்த்த போதிலும் மீண்டும் அந்த வார்த்தையை இராணுவத்தளபதி அழுத்தி கூறியுள்ளார்.

நல்லாட்சியிலும் இராணுவ அதிகாரமும் அடக்குமுறையும் தொடர்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Related Posts