கடந்த பல வருடமாக இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், மேலும் சில பகுதிகள் இன்னமும் கையளிக்கபடாத நிலையிலேயே இருந்தன.
தமது சொந்த காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதனால் எந்த விதமான வீட்டுத் திட்டங்களும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் தமது காணிகளை மீட்டுத் தருமாறு அக்காணிக்கு சொந்தமான 56 குடும்பங்கள் கடந்த மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையின் பயனாக தற்போது அப்பகுதி மக்களின் காணிகள் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.