வன்னிப் பகுதியில் இதுவரை இடம்பெற்று வந்த தேடுதல் வேட்டைகள் மற்றும் பதிவுகள் யாவும் யாழ்.குடாநாட்டுக்கு விரிவடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக தென்மராட்சி கொடிகாமம் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்களை விசேட அதிரடிப் படையினர் திரட்டி வருவதாக கொடிகாம பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றார்கள்.
குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் வர்த்தக நிலையத்தின் உரிமையாரின் பெயர்,அடையாள அட்டை இலக்கம், வியாபார நிலையத்தில் வேலை செய்யும் பணியாட்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை பதிவு செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் சிவில் உடையில் தங்களை புலனாய்வு துறையினர் என அடையாளப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டு சென்றுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.