கொக்குவில் புகையிரத நிலைய அதிகாரி மீது தாக்குதல்!! சந்தேகத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய அதிகாரி மீது மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கொக்குவில் புகையிரத நிலையத்தின் அதிகாரி ரௌடிகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்டார்என்ற சந்தேகத்தில் உடுவிலை சேர்ந்த 22 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Posts