கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இருவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸத் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts