கொக்குவில் தொடருந்து நிலையம் நிதி மோசடி தொடர்பில் தற்காலிகமாக மூடப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. இருப்பினும் குறித்த தொடருந்து நிலையத்தில் வழமையான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற சுமார் 20000 ரூபா கையாடல் தொடர்பாகதொடருந்து நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் .இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு செல்லுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Posts