கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகள்!!

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களின் தர வரிசை வெளியிட முடியாது.

இதேவேளை, அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவன் வி.சுபானன் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அத்துடன் அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையில் செல்வி ரி.கபிஷனா 172 புள்ளிகளையும் செல்வன் எஸ்.சந்தோஷ் 164 புள்ளிகளையும் செல்வி ஆர்த்திகா 155 புள்ளிகளையும் செல்வி பி. சாயுரி 151 புள்ளிகளையும் செல்வி யூ.தராங்கனி 151 புள்ளிகளையும் செல்வன் அக்சயன் 150 புள்ளிகளையும் செல்வி மதுமிலா 148 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

Related Posts