யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், சிறப்பு விருந்தினராக இந்து சமய கலாசார பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கு. ஜெயந்தன், திருமதி ஜெ.பத்மபிரியா, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் கல்லூரி அதிபரினால் இராதாகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இவ் பரிசளிப்பு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.