கொக்குவிலில் வீடு முற்றுகை; வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts