இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான தகுதிகாண் முகாம் இன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் நூற்றுக கணக்கான இளைஞர், யுவதிகள் பங்குகொண்டு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பங்களை வழங்கினர். அத்துடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இராணுவத்தினரின் நல்லிணக்க அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அறிவித்தல் கடந்த மூன்று நாட்களாக ஒலி பெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நல்லிணக்க அமைப்பின் பணிப்பாளர் செல்வா யாதவன் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் தளபதி பிரிகேடியர் ராஜபக்ஷ உட்பட மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் பட்டதாரிகள் உட்பட பல்வேறு கல்வித் தகைமை உடையவர்களும் கலந்து கொண்டதுடன் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.