கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் : வடக்கு விவசாய அமைச்சால் திறப்பு

வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Opening Ceremony of Groundnut Repository

உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார்.

இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது.

இங்கு ஆண்டுக்கு சராசரியாக 5000 மெற்றிக்தொன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலும் பெரும்பங்கு முல்லைத்தீவின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கொக்குளாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களிலேயே விளைவிக்கப்படுகிறது.

இதைக் கருத்திற்கொண்டே, கொக்குத்தொடுவாயில் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ம.அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன், வ.கமலேஸ்வரன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும் படங்களுக்கு..

Related Posts