கை துண்டிக்கப்பட்ட வைசாலிக்கு நீதி வேண்டி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

கடந்தவாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இடம்பெற்றது என்றும் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன், இந்த விடயம் இலங்கையின் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சமூகமட்ட சிவில் அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts