கை குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிலிருந்தே குறித்த கைக்குண்டை எடுத்துள்ளான். அந்த கைகுண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடா்பில் அச்சுவேலி பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts