கைவிடப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

landயாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பான விபரங்களை உடனடியாகப் பெற்று தமக்க அனுப்பி வைக்கும்படி யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் சுற்று நிரூபம் மூலம் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொது சுகதார அலுவலகர்களுக்கு அறிவித்துள்ளார்.

மக்கள் இடப்பெயர்வு மற்றும் வேறு இடங்களில் வசிப்பதினால் யாழ்.மாவட்டத்தில் பல நூற்றுக் கணக்கான காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது வட மாகாண ஆளுனரின் வேண்டுதலின் அடிப்படையில் இத்தகைய விபரங்களை கோரியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts