யாழ். மாவட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஆண்டு, முன்னைய ஆண்டுகளைவிட அதிகளவில் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 489 சிறுவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டிருந்தனர். 2011 ஆம் ஆண்டு இது 491 ஆக அதிகரித்திருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு சடுதியாக அதிகரித்து, 614 சிறுவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 14 சிறுவர்களும் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 9 சிறுவர்களும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 7 சிறுவர்களும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 75 சிறுவர்களும், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 23 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 14 சிறுவர்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 25 சிறுவர்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 25 சிறுவர்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 30 சிறுவர்களும், தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 37 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 32 சிறுவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 8 சிறுவர்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 18 சிறுவர்களும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 278 சிறுவர்களும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 19 சிறுவர்களும் கைவிடப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக, யாழ். மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக, யாழ். மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை கூறுகின்றனர்.