கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள்!!

புதிய ஆய்வுகளின் மூலம் கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள் தொடர்பில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளது.

கைபேசி மூலம் நமக்கெல்லாம் வரும் பாரிய ‘ஒரு பாதிப்பை’ பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் கைபேசியை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம்.

அதென்ன பாதிப்பு..?

கைபேசியினால் வரும் பாரிய பாதிப்புகள் இவைகள் தான்..

உறங்கும்போது கைபேசியை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு பெண்களுக்கு, நிலையற்ற கைபேசி ‘பார்வையிழப்பு’ எனும் கொடிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலையற்ற கைபேசி ‘பார்வையிழப்பு'”(transient smartphone “blindness”) என்றால் இருளில் தொடர்ச்சியாக கைபேசியை பயன்படுத்தும் போது ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் பார்வை இழப்பு ஆகும்.

இவர்களுக்கான பார்வை இழப்பு இவ்வாறு தான் ஏற்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் அறியவந்துள்ளது. 

வலது புறமாக படுத்தால் இடது கண்ணால் தான் கைபேசியை அதிகம் பார்க்க நேரிடும், அப்படியான ஒரு நிலையில் ஒரு கண்ணில் ஒளிமிகும் நிலையும் மறு கண் இருளான நிலையையும் சந்திக்கும் போது இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் அறியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நமது விழித்திரைகள் எந்தவொரு கெமராவையை விடவும் வெவ்வேறு ஒளி நிலைகளை அற்புதமாக கையாளக்கூடியதாக இருப்பினும் மிக அரிதாக நிலையற்ற கைபேசியினால் ‘பார்வையிழப்பு’ ஏற்படுகிறது.

தலையணையோடு கைபேசியை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.? எந்நேரமும் கைபேசி மற்றும் கணணியை பயன்படுத்துபவர்களா நீங்கள்..? உஷார்..!

ஆய்வு தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு…

Related Posts