வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், வெளியில் தமிழ் தேசியம் பேசித் திரியும் அனந்தி, தனது மக்களிடத்திலிருந்து பாதுகாப்பு கேட்டு இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சை நாடியுள்ளமை வேடிக்கையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய அமர்வில் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.