எம்மை கைது செய்யட்டும், கைது செய்தால் நாம் அங்கு (சிறையில்) ஆறுதலாக இருப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
அமெரிக்க, தெற்கு மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிற்கும் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது ‘தென்பகுதி அமைப்புக்கள் பல யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் (இராயப்பு ஜோசப் ஆண்டகை) ஆயர்களைச் கைதுசெய்யுமாறு வலியுறுத்துகின்றார்களே இது தொடர்பான உங்கள் கருத்து என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்விக்குப் பதிலளிக்கையிலே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ‘வடபகுதி ஆயர்களை ஜனாதிபதி சந்திப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகின, இந்நிலையில் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஆயர், ‘ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு இதுவரையில் எங்களுக்கு விடுக்கப்படவில்லை. அவ்வாறு ஜனாதிபதி அழைத்து போகாவிட்டால் எங்களைத் தூக்கி கொண்டு போய்விடுவார்கள் என்று சிரித்தவாறு யாழ்.மாவட்ட ஆயர் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்தி