ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊடாக இலங்கையின் 37 இணையத்தளங்கள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது.
இந்த பேஸ் புக் கணக்கானது ‘யக்கடயா போரம்” (yakadaya forum) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த ‘யக்கடயா போரம்” மேலதிகமாக ரத்து உகுஸ்ஸா, சுமேதா தன விஜய, கோயா ஹெக்கர் (goyahacker) ஆகிய பெயர்களிலும் பேஸ்புக் கணக்குகள் உள்ளமையும் அவையனைத்தும் இணையத்தள தகவல் ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டன என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.