கைதுசெய்யப்பட்டார் ஹிருணிகா பிரேமச்சந்திர

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் ஒருவரை தனது டிபன்டர் ரக வாகனத்தில் கடத்தி, துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைதுசெய்யும்படி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related Posts