கைதி ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை

கைதிகளில் ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலையாகும் பட்சத்தில் அவர்களால் அச்சுறுத்தல் காணப்படலாம் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாகவும் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளின் விடயத்தில் அரசாங்கமே தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் தன்னால் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டதாக குறித்த கைதி தனியார் செய்தி இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்

Related Posts