கைதிகள் கல்வி கற்பதற்காக தை மாதத்திலிருந்து சிறைப் பள்ளிக்கூடம்

கைதிகள் கல்வி கற்பதற்காக சிறைச்சாலை பள்ளிக்கூடம் வடரேகா சிறையில் தை மாதத்திலிருந்து இயங்க இருப்பதாக புனர்வாழ்வு சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

கல்விப்பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் வரையிலும் கல்வி கற்று பல்வேறு குறிறச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையிலிருக்கின்ற கைதிகளில் 280 கைதிகள் தெரிவு செய்யப்பட்டு கல்வியை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக ஆசிரியர்களை ஏற்பாடு செய்வதற்கும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு இணங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த சிறைப் பள்ளிக்கூடத்தில் நீர் குழாய் பொருத்தல் மின்சார இணைப்பு வேலைகளுக்கான பயிற்சிகளும் தரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts