சிறுமிகளில் நால்வர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- சிறிபவானந்தராஜா

Rapeயாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 11 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டை அடுத்து நேற்று திங்கள் கிழமை இரவு குறித்த சிறுமிகளில் 8 பேர் யாழ்.சாவகச்சேரி பொலிஸாரினால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

குறித்த சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்புணர்வு தொடர்பாகவும் அவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள், பெண்குறி சிதைவுகள் தொடர்பில் மருத்துவப் பரிசோதனை தகுந்த மருத்துவ நிபுணரினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மருத்துவ அறிக்கையின் படி குறித்த சிறுமிகள் நான்கு பேர் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சான்றுகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கையில், யாழ்.கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுதிகள் தொடர்பில் தேடுதல் நடத்தப்பட்டதில் ஒரு சிறுமி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய 7 சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் மற்றும் பொண்கள் பொலிஸ் பிரிவில் சிறுமிகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமிகள் தொடர்பில் யாழ்.சிறுவர் நீதிமன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுமியர்கள் காணவில்லை !

Related Posts