கைகலப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர் அறுவருக்கு இரு வருட தடை

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது.

கடந்த 31ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 31ஆம் திகதி முதல் இரண்டு வருட மாணவர்களையும் புதன்கிழமை வரையிலான 14 நாட்கள் பல்கலைக்கழத்திற்கான அனுமதியினை மறுந்திருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் அறுவருக்கான பல்கலைக்கழக அனுமதியினை இரண்டு வருடத்திற்கு மறுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts