கே.வி.ஆனந்த் படத்தில் யார் வில்லன்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி – டி.ராஜேந்தர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’, தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களில் நடித்த மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார்.

KV-Anand-Vijaysethupathi-TR

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கே.வி.ஆனந்த், இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இப்படத்தில் விஜய் சேதுபதி, டி.ஆர். இருவருக்குமே வில்லத்தனம், ஹீரோயிசம் என்பது கலந்து இருக்கும். கிளைமாக்சில்தான் யார் வில்லன்? என்பது தெரியவரும். அதை படம் பார்க்கும்போது ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தென்அமெரிக்காவில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு விஜய் சேதுபதி – மடோனா செபஸ்டியான் இருவரும் சேர்ந்து நடிக்கும் காதல் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மடோனா செபஸ்டியான் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக வெளிநாட்டு லொக்கேஷன்களில் ரொமான்ஸ் பாடல் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Related Posts