கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் “முடிஞ்சா இவனை புடி”!

நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம், என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். மூன்று தலை முறை கதைகளாக இருந்தாலும் அதை சுவராஸ்யமாக சொல்லக் கூடியவர். அந்த வகையில், அவரது படத்தில் காதல், காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என பல சுவைகளும் கலந்த கலவையாக இருக்கும்.

அதனால் கமர்சியல் ரீதியாக அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. ஆனால், ரஜினியை வைத்து அவர் இயக்கிய லிங்கா படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால், அடுத்தபடியாக தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்காமல் கன்னட நடிகர் சுதீப்பை வைத்து இப்போது முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

மேலும், தமிழ், கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்துள்ளார். கன்னட ரசிகர்களை இலக்காக வைத்தே இந்த படம் தயாராகியிருப்பதால் அங்குள்ள நடிகர் நடிகைகளே அதிகமாக நடிக்கிறார்களாம்.

அதோடு, எப்போதுமே தனது படங்களில் காமெடி, செண்டிமென்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், இந்த படத்திலும் அவற்றை தூக்கலாக கொடுத்துள்ளாராம். அதனால் வியாபார ரீதியாக முடிஞ்சா இவனை புடி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அப்படத்தில் நடித்துள்ள தமிழ் நடிகர் நடிகைகள் கூறுகிறார்கள்.

Related Posts