Ad Widget

கோதுமை விலை குறைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு கோதுமை மாவின் விலையை கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இவ்விலையினை அதிகரிப்பிற்கு நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்திடம் அனுமதி பெறப்படவில்லை என அவ் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்தோடு குறித்த விலை அதிகரிப்பிற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதில் மாற்றத்தினை ஏற்படுத்தாவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைத் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Posts