”கேவலமான மனசு இருந்தா,கோவில் சிலை கூட ஆபாசமாகத்தான் தெரியும்”

‘கேவலமான மனநிலை உள்ளவர்களுக்கு,கோவிலில் உள்ள சிலைகள் கூட ஆபாசமாகத்தான் தெரியும்’ என இயக்குநரும்,நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

‘என்னம்மா இப்படி பண்றிங்களேமா’ என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் வசனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இப்போது இல்லை எனலாம்.

ஆனால் அவர் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை “கடவுள் இருக்கான் குமாரு” படத்தில் கிண்டல் அடித்ததால்,அதில் நடித்த ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு தனது கண்டனங்களை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி குறித்து நடிகை ஸ்ரீபிரியா காட்டமான கருத்து ஒன்றைச் சொல்ல,அதுவும் பெரும் சர்ச்சையில் முடிந்தது.இந்நிலையில் யாரையோ தாக்குவது போல,லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி தன்னுடைய கண்களை திறந்துள்ளதாக,ரசிகர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டிவீட் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள அவர்.

”என்னுடைய நிகழ்ச்சி குறித்த கண்ணோட்டம் பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.கேவலமான மனது கொண்டவர்களுக்கு,கோவிலுக்குள் இருக்கும் சிலைகளை பார்த்தால் கூட செக்சியாக தெரியும்.”என பதிலளித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டிவீட் செய்துள்ள ரசிகர்,அதில் நடிகை ஸ்ரீபிரியாவையும்,ஆர்.ஜே.பாலாஜியையும் டேக் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிலை சீரியசாக எடுத்துக் கொள்வார்களா?இல்லை கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்களா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related Posts