கேரளா சட்டசபை தேர்தலை கண்காணிக்க சிறீலங்கா தேர்தல் ஆணையகத்துக்கு அழைப்பு

கேரளா தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கேரளா தேர்தல் ஆணையகம் கடிதம்மூலம் சிறீலங்கா தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

கேரள அரசின் அழைப்பிற்கிணங்க அடுத்த வாரமளவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related Posts