கேப்பாப்புலவு மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலத்தைத் மீட்டுத் தருமாறு கேப்பாப்புலவு மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாப்புலவு பிள்ளையார் கோயில் முன்றலில் அக்கிராமவாசியான கணேசபிள்ளை என்பவர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அக்கிராமத்தினைச் சேர்ந்த அனைத்து மக்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சனையை ஜனாதிபதியும் பாதுகாப்பும் அமைச்சும் கருத்தில் கொண்டு தமது காணிகளை மீட்டுத் தரும் வரையும் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லை யெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது காணிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தருமாறு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

koppila-pilavu-2

koppila-pilavu-1

Related Posts