விமானப்படையினர் வசமுள்ள தமது நிலங்களை மீட்பதற்கு இன்றுடன் 24ஆவது நாளாக தமது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக நேற்று
கொழும்பில் கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அவர்களின் பூர்வீகக் காணிகளை அவர்களிடம் மீண்டும் வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு, பல்வேறு சுலோகங்கள் ஏந்திய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் மத்திய மகாணா சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, கலாநிதி விக்ரமபாகு கருணாதிலக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜாசப் ஸ்டாலின், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.