கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் ஆக்கிரமித்துவைத்துள்ள தமது காணிகளை மீட்பதற்காக கடந்த பத்து நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் சிங்கள மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.