தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் சில சிங்கள மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, தென்னிலங்கையிலுள்ள மக்களும் எதிர்வரும் காலத்தில் இந்தப் போராட்டத்தில் மக்களுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்த அவர்கள் இராணுவத்தினர் மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.