கேப்பாப்புலவு போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஆதரவு

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 ஆவது நாளாகவும் இன்று விமானப்படைத் தளத்துக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஆதரவு பெருகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முல்லைத்தீவு கிளையினரும், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, தண்ணீர்ஊற்று, ஹிஜிராபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் பரிபாலன சபையினரும் நேற்று கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று தமது ஆதரவை வெளியிட்டதோடு, இரவு உணவையும் வழங்கியுள்ளனர்.

Related Posts